என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பஸ் போக்குவரத்து
நீங்கள் தேடியது "பஸ் போக்குவரத்து"
சென்னையில் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்து நின்றனர்.
சென்னை:
சென்னையில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. பலத்த கனமழை விட்டு விட்டு பெய்து வருவதால் மக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது.
மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் பஸ் போக்குவரத்து குறைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக 3000 மாநகர பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்று 2500-க்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் இல்லாததால் காலியாக ஓடின. ஒரு சில வழித்தடங்களில் மட்டுமே பயணிகள் அதிகளவு பயணித்தனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் வெளியே வரவில்லை. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும், அத்தியாவசிய பணியில் ஈடுபட்டவர்கள் மட்டுமே வெளியில் காணப்பட்டனர்.
குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ் நிறுத்தங்களிலும், பயணிகள் நீண்ட நேரம் காத்து நின்றனர். வழக்கமான கால நேரப்படி பஸ்கள் இயக்கப்படவில்லை.
ஒரு பஸ்சில் பயணிகள் ஓரளவு அமர்ந்த பிறகுதான் அடுத்த பஸ் இயக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு பஸ்சிற்கும் இடைப்பட்ட நேரம் அதிகமானது.
பஸ் நிறுத்தங்களில் 30 நிமிடத்திற்கு மேலாக பயணிகள் காத்து நின்றனர். மாநகர பஸ் சேவை குறைக்கப்பட்டபோதும் மின்சார ரெயில் சேவை குறைக்கப்படவில்லை. முழு அளவில் இயக்கப்பட்டன.
4 மார்க்கங்களிலும் 670 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. மின்சார ரெயில்களிலும் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.

பாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் 30 மணிநேர பஸ் சேவை நவம்பர் 3-ம் தேதி தொடங்கவுள்ளது. #PakistantoChina #PakistantoChinaBusservice
இஸ்லாமாபாத்:
இந்தியாவின் பகைநாடான பாகிஸ்தான் மீது சீனா அளவுகடந்த பாசத்தை பொழிந்து, அக்கறை காட்டி வருகிறது.
சீனாவின் நிதியுதவி மற்றும் தொழில்நுட்பத்துடன் அரபிக்கடலை ஒட்டி பாகிஸ்தானில் உள்ள குவாடார் துறைமுகத்தை சீனாவில் தன்னாட்சி உரிமைபெற்ற உய்குர் பகுதியுடன் இணைக்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டம் ஆகியவற்றின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பஸ் சேவை நவம்பர் 3-ம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த பஸ் மூலம் சுமார் 30 மணிநேரம் பயணம் செய்தால் பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கும், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லலாம். இந்த பயணத்துக்கான ஒருவழி கட்டணம் 13 ஆயிரம் ரூபாயாகவும், இருவழி (சென்று, திரும்ப) கட்டணம் 23 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சீனாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் நேரடி சாலை வசதி தற்போது வரை இல்லை. எனவே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் வழியாக இந்த பஸ் சென்றுவரும். வாரத்தில் 4 நாட்கள் இந்த பஸ் போக்குவரத்து நடைபெறும் என பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PakistantoChina #PakistantoChinaBusservice

நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். #keralafloods
செங்கோட்டை:
தமிழக, கேரள எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை வழியாக தினமும் 24 மணி நேரமும் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி சென்று வருகின்றன. இந்த பாதையில் கோட்டைவாசல் தாண்டி ஆரியங்காவு வனத்துறை சோதனை சாவடி முதல் தென்மலை வரை மலைப்பாதையாகும். மிகவும் கடினமான வளைவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகள் இதில் உள்ளன.
தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அளவுக்கு அதிகமான சரக்குகளை ஏற்றிச் சென்று வருவதால் இந்த வழியில் அடிக்கடி சாலை பழுதாகும். அதை அடுத்து இந்தச் சாலைகளை கேரள மாநில நெடுஞ்சாலைத் துறையினர் சரி செய்வதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்துக்கும் அதிகமான அளவு இந்தப் பகுதிகளில் பெய்து வருவதால் கல்லடா தென்மலை 13 கண் பாலம் அருகே சாலையில் விரிசல் உருவாகி அருகிலுள்ள கல்லடா ஆற்றில் மண்சரிவு ஏற்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு கேரளா மாநிலம் கொல்லம் மாவட்ட நிர்வாகம் இந்த சாலையில் கனரக வாகனங்கள் 10 டன்னுக்கு அதிகமான அளவு கொண்ட பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை பாதை சரி செய்யும் வரை தடை செய்ய உத்தரவிட்டது. இந்த விரிசல் அதிகமானதால் சிறிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் கன மழையினால் பலத்த சேதம் உண்டானது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. லட்சக்கணக்கானோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டன. மழை வெள்ளம் காரணமாகவும் அந்த வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மழை வெள்ளம் குறைந்ததையடுத்து மீண்டும் கேரளாவுக்கு இன்று பஸ் போக்குவரத்து தொடங்கியது. எனினும் சாலையில் விரிசல் ஏற்பட்ட பகுதிவழியே பஸ்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து செங்கோட்டை பகுதியில் இருந்து செல்லும் பஸ்கள் எம்சன் பகுதிக்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிடவும், அங்கிருந்து 200 மீட்டர் தூரம் பயணிகள் நடந்து சென்று மறுபுறம் பஸ் ஏறி செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. #keralafloods

×

X